
அமெரிக்க அதிபர் தனது மனைவி எலினா உடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நமது பாரத தேசமான இந்தியாவுக்கு வருகை தருகிறார் வரும் 24 25 தேதிகளில் முகாமிடும் தம்பதிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகின்றனர்.
இதனையடுத்து அங்கிருக்கும் சேரி குடியிருப்புகள் கண்களுக்கு தெரியாத வகையில் மிக உயரமான சுவர்களை எழுப்பி மறைக்கும் நிலையில், இன்று தேவ் சரண் என்று அழைக்கப்படும் பகுதியில் வாழும் அப்பாவி மக்களை உடனே வெளியேற அப்பகுதி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அங்கு சுமார் 45 குடும்பங்களுக்கு அதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஏனெனில் அவர்கள் தங்கிய இடம் அரசுக்கு சொந்தமான பகுதி என அப்பகுதி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் புதன்கிழமை கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு கோரியுள்ளனர்.